search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வேதாரண்யம் அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

    வேதாரண்யம் அருகே குடிநீர் வழங்ககோரி பொது மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொது மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநிர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடுவதால் பலர் குடிநீர் கிடைக்காமல் அவதிபட்டனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுப்பபடவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆயக்காரபுலம் 2-ம் சேத்தி பகுதி பொது மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை கண்டறிந்து அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் திருடியவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இதை தொடர்ந்து அங்கு தொழிலாளர்கள் வரவழைக்கபட்டு குடிநீர் திருடும் மின் மோட்டார்கள் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை கண்ட பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×