என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே காதலியை உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர்
    X

    திண்டுக்கல் அருகே காதலியை உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர்

    காதலியை உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பொம்மையகவுண்டன் பட்டியைச் சேர்ந்த காமையன் மகன் பொம்முராஜ். இவர் ஈரோட்டில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே மில்லில் ஊட்டியைச் சேர்ந்த ரெபேக்கா (வயது 25) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் விபத்தில் இறந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    பொம்முராஜூம் ரெபேக்காவும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. ரெபேக்காவின் நிலைமையை அறிந்த பொம்முராஜ் அவரிடம் பணம், நகை, செல்போன் ஆகியவற்றை வாங்கி அனுபவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    ஆனால் தற்போது திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இது குறித்து ரெபேக்கா வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பொம்முராஜூடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×