என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பறிமுதல்
    X

    புதுக்கோட்டையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பறிமுதல்

    புதுக்கோட்டையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு தனியார் பஸ் சென்றது. புதுக்கோட்டை பஸ் நிலையம் வந்ததும் அதில் இருந்த பயணிகள், பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த அதிகாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையிலான  அதிகாரிகள் குழுவினர் பஸ்சில் ஏறி பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
     
    மேலும் டிரைவர்-கண்டக்டரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×