என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கல்லூரி முதல்வர் பலி
By
மாலை மலர்8 May 2017 5:07 PM GMT (Updated: 8 May 2017 5:07 PM GMT)

வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து, மதுரையை சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் பலியானார்.
வேடசந்தூர்:
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த பல்கலைக்கழக நகரை சேர்ந்தவர் தமிழேந்தி (வயது 45). இவர் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மினி. அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் தமிழேந்தி சேலத்தில் வசிக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்களை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். அந்த கார் நேற்று அதிகாலை வேடசந்தூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சத்திரப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தமிழேந்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு தமிழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×