என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கொடுங்கையூரில் லாரி தீப்பிடித்து எரிந்தது

பெரம்பூர்:
கொடுங்கையூர், தண்டையார்பேட்டை சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே தனியாருக்கு சொந்தமான லாரிகள் நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று காலை திடீரென ஒரு லாரியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் எரிந்து நாசமானது.
லாரியில் தீப்பிடித்தவுடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற லாரிகளை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்திற்கான என்ன என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் லாரிக்குள் தீ வைத்தனரா என்பது குறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.