என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 200 சிறு,குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
    X

     பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 200 சிறு,குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்

    • தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • பீக் ஹவர்ஸ் நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நிலை மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி சிறு,குறு தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டம்

    நெல்லை மாவட்டத்தில் பேட்டை தொழிற்பேட்டை யில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் 200 சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்க வில்லை. இதனால் சுமார் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சிறு,குறு தொழிற்சங்க துணைத் தலைவர் சுந்தரேசன் கூறும்போது, கடந்த ஆண்டை விட தற்போது நிலை கட்டணம் 410 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் ' பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திரும்ப பெற வேண்டும்

    நிலை கட்டணத்தை திருப்பபெறகோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 லட்சம் தொழிளார்கள் பாதிக்கப்பட்டுள்னர் என்றார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 500 சிறு,குறு தொழிற்சாலைகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×