என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரத்தில் 2 ¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    ராசிபுரத்தில் 2 ¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • ராசிபுரம் டவுன் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சுமார் 2 ¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் வரதன் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் 2 ¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ரஜினி ( வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×