என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அம்பை மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
  X

  அம்பை மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பாசமுத்திரத்தில் உள்ள புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது42), இவர் கடந்த 14-ந் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார்.
  • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  கல்லிடைக்குறிச்சி:

  அம்பாசமுத்திரத்தில் உள்ள புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது42), இவர் கடந்த 14-ந் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார்.

  அப்போது மோட்டார் சைக்கிளை படித்துறை அருகே நிறுத்திவிட்டு குளிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தப்போது, அதனை காணவில்லை.

  இதுகுறித்து சீனிவாசன் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  இதில் நெல்லை தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த நாகராஜன் (24), மேலப்பாளையம் அகமது பிள்ளை தெருவை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் (21) ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

  இதையடுத்து அம்பை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நாகராஜன், முகமது அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

  Next Story
  ×