என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நெல்லையில் தொழிலாளி உள்பட 2 பேர் திடீர் சாவு
- நெல்லையில் தொழிலாளி உள்பட 2 பேர் திடீரென இறந்தனர்.
- ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
நெல்லை:
தச்சநல்லூர் அருகே உள்ள அழகனேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 39). கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று பேட்டை கோடீஸ்வரன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் காங்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ெநஞ்சு வலிப்பதாக கூறிய அவர் மயங்கி விழுந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முகமது சுல்தான்(25). இவர் அங்குள்ள சிக்கன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கியவர் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
அவரது உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.