என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது
- திட்டக்குடி அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சீனி பாபு திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடலூர்:
திட்டக்குடி அடுத்த சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்பதாக திட்டக்குடி டிஎஸ்பி காவியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் திட்டக்குடி டிஎஸ்பி உத்தரவின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சித்தேரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொ ண்டிருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் வெற்றி வேல் (வயது 22), சேலம் மாவட்டம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் அஜய் (வயது 19) இருவ ரையும் திட்டக்குடி சப்இ ன்ஸ்பெ க்டர் பாக்யராஜ், ராமநத்தம் சப் இ ன்ஸ்பெ க்டர் கோபிநாத் மற்றும் போலீசார் பிடித்து சிறுபா க்கம் காவல் நிலை யத்தில் ஒப்படை த்தனர். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் அவர்களி டமிருந்து 60 லிட்டர் சாராயம், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமதல் செய்தனர் .






