என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
- புதூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.
- முகைதீன்,வசந்தகுமார் ஆகியோர் முருகனிடம் கஞ்சா வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் புதூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் களக்காடு நடுத்தெருவை சேர்ந்த முகைதீன் (25), கடம்போடுவாழ்வை சேர்ந்த வசந்தகுமார் (20) என்பதும், இவர்கள் களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முருகன் (60) என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4,650 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






