என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 18¾ பவுன் தங்கத்துடன்ெதாழிலாளி ஓட்டம்
- ரகுகுமார் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- தங்கத்தை கம்மல்களாக செய்து கொடுக்கும்படி கொடுத்தார்.
கோவை
கோவை செல்வபுரம் அருகே உள்ள தங்கசாமி காலனியை சேர்ந்தவர் ரகுகுமார் (வயது 45). இவர் பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகரில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபன் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரகுகுமார், பாபனிடம் 18¾ பவுன் தங்கத்தை கம்மல்களாக செய்து கொடுக்கும்படி கொடுத்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கம்மல்களை செய்து கொடுக்கவில்லை. அவர் வேலைக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரகுகுமார் அவரது அறைக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் பாபன் அங்கு இல்லை. அவர் தங்கத்துடன் தனது சொந்த ஊருக்கு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இது குறித்து ரகுகுமார் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 18¾ பவுன் தங்கத்துடன் சொந்த மாநிலத்துக்கு ஓட்டம் பிடித்த தங்க நகை பட்டறை தொழிலாளியை தேடி வருகிறார்கள்.






