என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மானூரில் தொழுவத்தில் புகுந்து 17 ஆடுகளை கொன்ற நாய்கள்- 4 குட்டிகளை தூக்கி சென்றது
  X

  நாய்கள் கடித்ததில் இறந்து கிடக்கும் ஆடுகளை படத்தில் காணலாம்.

  மானூரில் தொழுவத்தில் புகுந்து 17 ஆடுகளை கொன்ற நாய்கள்- 4 குட்டிகளை தூக்கி சென்றது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாயியான முத்து 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
  • தினமும் இரவு வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம்.

  நெல்லை:

  நெல்லை அருகே உள்ள மானூர் வடக்கு ெதருவை சேர்ந்தவர் முத்து (வயது 34). விவசாயி. இவர் 35க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

  தினமும் இரவு வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம். அதேபோல் நேற்று இரவு ஆடுகளை அடைத்து வைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

  நள்ளிரவு ஆடுகள் சத்தமிடுவதை கண்டு தொழுவத்தில் பார்த்த போது கும்பலாக வந்த நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்தது. அப்போது அதனை விரட்டினார்.

  இதில் சம்பவ இடத்திலேயே 17 ஆடுகள் இறந்து கிடந்தது. மேலும் 15 ஆடுகள் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் அபாய நிலையில் இருந்தது. அங்கு வந்த நாய்கள் 4 ஆட்டுக்குட்டிகளையும் தூக்கி சென்றது.

  இதுதொடர்பாக முத்து மானூர் போலீசில் புகார் செய்தார். கால்நடை மருத்துவர் தினேஷ் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

  இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, மானூர் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பு பணிக்காக நாய்களை வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்கள் அவ்வப்போது ஆடுகளை கடித்து வருவதோடு பொதுமக்களையும் பயமுறுத்தி வருகிறது.

  கடந்த வாரம் இதேபோல் ஒரு தோட்டத்தில் புகுந்த நாய்கள் 40 கோழிகளை கடித்து கொன்றது. தற்போது தொழுவத்தில் புகுந்து 17 ஆடுகளை கொன்றுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என விவசாயி முத்து கோரிக்கை விடுத்தார்.

  Next Story
  ×