search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணையில் இருந்து வருகிற 16-ந்தேதி தண்ணீர் திறப்பு
    X

    வயலில் எரு கலைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

    கல்லணையில் இருந்து வருகிற 16-ந்தேதி தண்ணீர் திறப்பு

    • தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
    • டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ,பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும்.

    இதில் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டுக்கான மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

    அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை நிலவரப்படி, கரூர் மாவட்டம் மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    கல்லணைக்கு காவிரி நீர் நாளை இரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    வயல்களில் உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்ட ங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

    இதில், டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வளத்துறை ,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×