என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேப்பூரில்  மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1.50 லட்சம் கொள்ளை
  X

  மர்மநபர் மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறக்கும் காட்சி.

  வேப்பூரில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1.50 லட்சம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துள்ளார்.
  • மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து சென்றார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தொண்டங்குறிச்சி கிராமத்தை‌ சேர்ந்தவர் இளவரசன் (வயது 55). இவர் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து கொண்டு அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிக்கு சென்றார். அவர் வங்கிக்குள் சென்ற பிறகு அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து செல்கிறார்.

  இளவரசன் அருகில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளின் வீட்டிற்கு சென்று பெட்டி யை திறந்து பார்த்தார். ஆனால் அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து இளவரசன் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், எஸ்ஐ கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். பின்னர் இளையராஜாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மோட்டார் சை்ககிள் பெட்டியின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்ச்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து வேப்பூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×