என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வீடு புகுந்து 15 பவுன் நகைகள் கொள்ளை
- ஓணம் கொண்டாட சென்ற நேரத்தில் துணிகர சம்பவம்
- பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
குனியமுத்தூர்,
கேரள மாநிலம் திரு ச்சூரை சேர்ந்தவர் வேணு கோபால். இவரது மனைவி ஸ்ரீ கலா (வயது 49). இவர்கள் குடும்பத்துடன் போத்தனூர் அருகே உள்ள குறிச்சியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஓணம் பண்டிகை முன்னிட்டு கடந்த 27ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தங்களது சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றனர். அப்போது இவர்கள் வீட்டில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், டாலர், கம்மல் ,வளையல் உள்பட 15 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய ஸ்ரீ கலா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது .
இது குறித்து அவர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று விசாரணை நடத்தினர் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்ட னர். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஓணம் பண்டிகை கொண்டாட சென்றவரின் வீட்டில் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பீளமேடு அருகே உள்ள தொட்டிபா ளையம் பிரிவை சேர்ந்தவர் ராணி (46 ).சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த நெக்லஸ், வளையல், கை செயின் மோதிரம் உட்பட 7 முக்கால் பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றனர் .இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






