என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனி மூட்டம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 14 விமானங்கள் தாமதம்- ஓடுபாதை தெரியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு
- பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.
- ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.
ஆலந்தூர்:
சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.
மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், 2 பெங்களூர் விமானங்கள் கொல்கத்தா, கோவை, ஐதராபாத் ஆகிய 7 விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு தாமதமாக தரையிறங்கின.
அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், செயின் டென்னிஸ், கொல்கத்தா, புனே, பெங்களூர் ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மொத்தம் 14 விமானங்கள் வருவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.






