search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகரில் திருடப்பட்ட 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
    X

    மீட்கப்பட்ட செல்போனை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் ஒரு பெண்ணிடம் வழங்கிய காட்சி.

    நெல்லை மாநகரில் திருடப்பட்ட 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

    • புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து மோசடி செய்த வங்கி கணக்குகளை முடக்கி ரூ. 15 லட்சத்து 83 ஆயிரம் மீட்கப்பட்டது.
    • மீட்கப்பட்டவை இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் காணாமல் போன செல்போன்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதன் அடிப்படையில் மீட்கப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்களை இன்று மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    இதேபோல் இணையதளம் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும், பரிசுகள் விழுந்து இருப்பதாகவும் கூறி பணம் திருடப்பட்ட வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் இணையதளம் மூலமாக பணம் மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து மோசடி செய்த வங்கி கணக்குகளை முடக்கி ரூ. 15 லட்சத்து 83 ஆயிரம் மீட்கப்பட்டது. அவையும் இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அப்போது துணை போலீஸ் கமிஷனர்கள் டி.பி. சுரேஷ்குமார், சுரேஷ்குமார், மாநகர சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யாலட்சுமிி, கலை சந்தனமாரி, தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    Next Story
    ×