search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை- திருச்செந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு - விழா கொண்டாட ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு முடிவு
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லை- திருச்செந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு - விழா கொண்டாட ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு முடிவு

    • ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். அமிர்தராஜ் வரவேற்று பேசினார்.

    நெல்லை - திருச்செந்தூர் இடையில் மின்சார ரெயில் திட்டத்தை வேகப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வந்துள்ள தென்னக ரெயில்வே மண்டல மேலாளரை பாராட்டியும், இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர அயராது பாடுபட்ட அப்போதைய நெல்லை ஜில்லா போர்டு மெம்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த டோகோ. பொன்னையா நாடாருக்கு நினைவுத்தூண் அமைப்பது என்றும், ஆறுமுகநேரி ரெயில் நிலைய அணுகு சாலையை தார் சாலையாக மாற்றக் கோரியும், திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நிர்வாகிகள் முருகேச பாண்டியன், சுகுமார், நடராஜன், வெங்க டேசன், மனோகரன்,கற்பக விநாயகம், கணேஷ் மூர்த்தி, சண்முக சுந்தரம், கந்தபழம், குருசாமி, சீனிவாசன், தங்கேஸ்வரன், சுந்தர், லிங்க பாண்டி, கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×