என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி- 100 பேர் கைது
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
- இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்:
மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் திருப்பூரில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்தநிலையில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






