என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமிதாப் பச்சன்
    X
    அமிதாப் பச்சன்

    கொரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் பச்சன்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

    இந்திய அளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×