search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் உறுதியானது
    X

    இந்தியாவில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் உறுதியானது

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. #MahindraXUV300 #ElectricVehicle



    மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாட்டின் முதல் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலை தழுவி உருவாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. 300 அறிமுகம் செய்யப்படலாம். 

    வடிவமைப்பு ரீதியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் உடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காருக்கான பேட்டரிகளை மஹிந்திரா நிறுவனம் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது.



    இதற்கென மஹிந்திரா நிறுவனம் எல்.ஜி. செம் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. எல்.ஜி. செம் நிறுவனம் இந்தியாவில் பயன்படுத்த ஏதுவாக பேட்டரி செல்களை விநியோகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மாடல் நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிறப்பம்சங்கள் மற்றும் உபகரணங்களும் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மற்றும் வழக்கமான எக்ஸ்.யு.வி. 300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். மேலும் இந்த காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் / கேமரா, சன்ரூஃப், ஏழு ஏர்பேக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம். 
    Next Story
    ×