என் மலர்
செய்திகள்

இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்ற ஜீப் காம்பஸ் விலை கிடுகிடு உயர்வு
இந்திய சந்தையில் எஸ்.யு.வி.ரக மாடல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீப் இந்தியா நிறுவனத்தின் கார் விலை உயர்ந்திருக்கிறது. முன்னதாக ஹோன்டா மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்.யு.வி. ரக மாடல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜீப் இந்தியா நிறுவன வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது. முன்னதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனங்கள் விலை மாற்றத்தை அறிவித்தன.
சமீபத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் இதன் விலை ரூ.21,000 முதல் ரூ.72,000 வரை ஒவ்வொரு இன்ஜின் மற்றும் மாடல்களுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ.15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) துவங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.21.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலை ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பின் 43 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் விலை செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் ஜீப் இந்தியா நிறுவனம் தனது மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்து போட்டியை பலப்படுத்த நினைத்தாலும், இந்தாயவிற்கு இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை அதிகமாகிறது.
இந்தியாவில் ஜீப் சிபியு மாடல்களான செரோக்கீ மற்ரும் ராங்களர் உள்ளிட்ட மாடல்களின் விலை ரூ.2.75 லட்சத்தில் இருந்து ரூ.6.43 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஜீப் நிறுவனத்தின் ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் ஃபியாட் புன்டோ, ஃபியாட் அவென்ச்சூரா, அபார்த் புன்டோ, அபார்த் அவென்ச்சூரா மற்றும் ஃபியாட் லினியா உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஃபியாட் லினியா மற்றும் ஃபியாட் அவென்ச்சூரா மாடல்களின் விலை ரூ.9,000 முதல் ரூ.14,000 வரை அதிகரித்துள்ளது.
பேஸ் மாடல் ஜீப் காம்பஸ் விலை ரூ.21,000 வரை அதிகரித்துள்ள நிலையில், டாப் என்ட் மாடல் ரூ.72,000 வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜீப் காம்பஸ் விலை உயர்வு விற்பனையில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story