என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    GOLD PRICE TODAY : புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்
    X

    GOLD PRICE TODAY : புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்

    • தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 26-ந்தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து இருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,980-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 192 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,720

    27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,160

    26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760

    24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-11-2025- ஒரு கிராம் ரூ.183

    27-11-2025- ஒரு கிராம் ரூ.180

    26-11-2025- ஒரு கிராம் ரூ.176

    25-11-2025- ஒரு கிராம் ரூ.174

    24-11-2025- ஒரு கிராம் ரூ.171

    Next Story
    ×