என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
- தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் எகிறி வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
இப்படியே போனால் எப்படி தங்கம் வாங்குவது? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடியது. இந்த நிலையில், கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460-ம், பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் அதிரடியாக சரிந்து, ஒரு பவுன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் தங்கம் விலை வந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது. நேற்றும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்தது. ஆனால் காலையில் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகலில் சறுக்கலை சந்தித்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200
23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
22-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,320
21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-10-2025- ஒரு கிராம் ரூ.170
23-10-2025- ஒரு கிராம் ரூ.174
22-10-2025- ஒரு கிராம் ரூ.175
21-10-2025- ஒரு கிராம் ரூ.182
20-10-2025- ஒரு கிராம் ரூ.190






