GOLD PRICE TODAY: தங்கம், வெள்ளி விலை உயர்வு - இன்றைய நிலவரம்

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.99 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY: தங்கம், வெள்ளி விலை உயர்வு - இன்றைய நிலவரம்
Published on

தங்கம் விலை கடந்த வாரம் வரை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்திருந்த நிலையில், நேற்று குறைந்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 380-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 226 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

16-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,800

15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

19-12-2025- ஒரு கிராம் ரூ.221

18-12-2025- ஒரு கிராம் ரூ.224

17-12-2025- ஒரு கிராம் ரூ.222

16-12-2025- ஒரு கிராம் ரூ.211

15-12-2025- ஒரு கிராம் ரூ.215

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com