என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்து ரூ.95 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
- தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் இன்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் சற்று சரிவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் இறுதி வரை விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கி உள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2-வது முறையாக மீண்டும் உயர்ந்தது.
தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,200 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
வெள்ளி விலையும் இன்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது. காலையில் ஒரு கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் 1 ரூபாய் உயர்ந்து 183 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-11-2025- ஒரு கிராம் ரூ.173
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165






