என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    கடும் ஏற்றத்துடன் நிறைவடைந்த இன்றைய பங்குச் சந்தை..!
    X

    கடும் ஏற்றத்துடன் நிறைவடைந்த இன்றைய பங்குச் சந்தை..!

    • சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
    • டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டது.

    அமெரிக்கா மற்ற நாடுகள் மீது கடுமையாக வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டு வந்தது. பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதனால் பங்குச் சந்தை மெல்ல மெல்ல ஏற்றம் கண்டன.

    கடந்த வாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட ஒப்பந்தம் ஏற்பட்டது.

    அதேவேளையில் அமெரிக்கா சீனா மீது விதித்த கடுமையான பரஸ்பர வரியை வெகுவாக குறைத்துள்ளது. இவற்றுடன் வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டார்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால் இன்று மதியத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக அளவு ஏற்றம் காணப்பட்டது.

    இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 395.20 புள்ளிகளும் உயர்ந்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,330.56 புள்ளிகளாக இருந்து. இன்று காலை 81,354.43 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்த பட்சமாக 80,762.16 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,718.14 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,200.18 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,666.90 புள்ளியாக இருந்தது. இன்று காலை 24,694.45 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்த பட்சமாக 24,494.45 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 25,116.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 395.20 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 25,062.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் 30 நிறுவன பங்குகளை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 29 நிறுவன பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.

    இந்தூஸ்இந்த் வங்கி பங்கு மட்டும் சரிவை சந்தித்தது.

    Next Story
    ×