என் மலர்
வணிகம் & தங்கம் விலை

தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவை சந்தித்த பங்குச் சந்தை..!
- ஐடிசி நிறுவன பங்கு 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது.
- பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 73.75 புள்ளிகளும் சரிந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், நிஃப்டி 174.95 புள்ளிகளும் சரிந்த நிலையில், இன்று 2ஆவது நாளாகவும் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,551.63 புள்ளியாக இருந்தது. இன்று காலை 4 புள்ளிகள் சரிவுடன் 81,457.61 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. அதிக பட்சமாக 81,613.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,244.02 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 239.31 புள்ளிகள் சரிந்து 81,312.32 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,826.20 புள்ளியாக இருந்தது. இன்று காலை 6 புள்ளிகள் உயர்ந்து 24,832.50 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிக பட்சமாக 24,864.25 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,737.05 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 73.75 புள்ளிகள் சரிந்து 24,752.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஐடிசி நிறுவனத்தின் பங்கு இன்று 3 சதவீதம் அளவிற்கு சரிந்தது. அந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான BAT Plc, அதன் பங்குகளில் 2.5 சதவீதத்தை 1.51 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (12927 கோடி ரூபாய்) விற்பனை செய்ததால் ஐடிசி பங்கு கடும் சரிவை சந்தித்தது.
மேலும் இந்தூஸ்இந்த், நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, பவர் கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா பங்குகளும் சரிவை சந்தித்தன.
பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் ஏற்றம் கண்டன.
தெற்காசிய பங்குச் சந்தைகளில் தென்கொரிய பங்குச் சந்தை மற்றும் ஏற்றம் கண்டது. ஜப்பான், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவை எதிர்கொண்டது. அமெரிக்க பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டிருந்தது.






