என் மலர்
வணிகம் & தங்கம் விலை

Stock market today: ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச் சந்தை
- மும்பை பங்குச் சந்தை குறியீடு என் சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்தது.
- இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 114.45 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு என் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 80,501.99 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 160 புள்ளிகள் உயர்ந்து 80,661.62 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிக பட்சமாக 81,049.03 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,657.71 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 294.85 புள்ளிகள் உயர்ந்து 80,796.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24,346.70 புள்ளிகளில நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 24,419.50 புள்ளிகளில் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 24,526.40 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,400.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 114.45 புள்ளிகள் உயர்நத 24,461.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.






