என் மலர்
வணிகம் & தங்கம் விலை

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: சரிவை சந்தித்த பங்குச் சந்தை..!
- நேற்றிரவு இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் டிரோன் தாக்குதல் நடைபெற்றது.
- போர் பதற்றம் காரணமாக பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா அவைகளை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்தியாவும் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை தலா 1% வரை சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 80,334.81 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 660 புள்ளிகள் சரிந்து 78,968.34 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 78,968.34 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,032.93 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 880.34 புள்ளிகள் (1.10 சதவீதம்) சரிந்து 79,454.47 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,273.80 புள்ளியாக இருந்தது. இன்று காலை 338.05 புள்ளிகள் சரிந்து 23,935.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 23,935.75 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 24,164.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 265.80 புள்ளிகள் சரிந்து (1.10 சதவீதம்) 24,008.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பஜாஜ் பின்செர்வ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மார்ச் மாதம் வரையிலான 4ஆவது காலாண்டில் 871 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அறிக்கை வெளியிட்டிருந்து டைட்டன் நிறுவனத்தின பங்கு சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் லார்சன் அண்டு டூர்போ நிறுவன பங்கும் 4 சதவீதம் உயர்ந்தது.
டாட்டா மோட்டார்கள், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. ஆசிய மார்க்கெட்டுகளில் பெரும்பாலானவை இன்று ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






