search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே மாதத்தில் 7.69 லட்சம் விற்பனை செய்து உலக சாதனை படைத்த ஹீரோ ஸ்பிலென்டர்
    X

    ஒரே மாதத்தில் 7.69 லட்சம் விற்பனை செய்து உலக சாதனை படைத்த ஹீரோ ஸ்பிலென்டர்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலென்டர் விற்பனையில் உலக சாதனை படைத்து இருக்கிறது. #heromoto



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலென்டர் மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறது. 

    ஹீரோ ஸ்பிலென்டர் ஒரே மாதத்தில் சுமார் 7.69 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் ஒரே மாதத்தில் 7.5 லட்சம் விற்பனையை கடந்த முதல் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    உலகளவில் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் பெரிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் சுமார் 46% ஹீரோ மோட்டோகார்ப் மாடல்கள் ஆகும்.



    உலகளவில் இந்திய சந்தை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஹோன்டா, சுசுகி மோட்டார்சைக்கிள் மற்றும் யமஹா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிக முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களை எடுத்துக் கொண்டால், ஹீரோ மாடல் நிச்சயம் முன்னணியில் இருக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் ஏழு லட்சம் விற்பனை மைல்கல்லை அந்நிறுவனம் ஐந்தாவது முறையாக கடந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 42 லட்சம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

    மேலும் பண்டிகை காலத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என ஹூரோ மோட்டோகார்ப் எதிர்பார்க்கிறது. ஸ்பிலென்டர் தவிர, ஹீரோ பேஷன் மோட்டார்சைக்கிள் மாடல்களும் விற்பனையில் வளர்ச்சி பெற்று வருகிறது. இத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    Next Story
    ×