search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்கூட்டர் விற்பனையில் அசத்தும் ஹோன்டா
    X

    ஸ்கூட்டர் விற்பனையில் அசத்தும் ஹோன்டா

    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா அபார வளர்ச்சி பெற்று, இந்திய சந்தையில் முன்னணி இடத்தை பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HondaActiva
    இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஜூன் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஹோன்டா நிறுவனம் மட்டும் 81% பங்குகளை பெற்றிருக்கிறது.

    அந்நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச வளர்ச்சி பெற்று ஹோன்டா நிறுவன ஸ்கூட்டர்கள் சந்தையில் 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த காலாண்டில் மட்டும் ஹோன்டா நிறுவனம் 9,04,647 ஆக்டிவா மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. இதே காலாண்டில் முன்னதாக இந்தியாவில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருந்த ஹீரோ ஸ்ப்லென்டர் 8,24,999 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மோட்டார்சைக்கிள்களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவா தொடர்ந்து இந்தியாவில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இதே காலாண்டில் அதிகம் விற்பனையாகியிருக்கும் ஸ்கூட்டர், சுமார் 9 லட்சம் யூனிட்களை கடந்த ஒற்றை இருசக்கர வாகனமாக இருக்கிறது. மேலும் ஆக்டிவா மற்றும் ஸ்ப்லென்டர் யூனிட்களிடையே குறைந்த இடைவெளியாக பதிவாகியுள்ளது.


    முன்னதாக செப்டம்பர் 2017 காலாண்டில் 9,51,186 ஆக்டிவா யூனிட்கள் விற்பனையான நிலையில் 7,13,182 ஸ்ப்லென்டர் யூனிட்களே விற்பனையாகி இருந்தது. மே 2016-ம் ஆண்டு ஸ்ப்லென்டர் மாடலை பின்னுக்குத் தள்ளி ஹோன்டா ஆக்டிவா இந்திய சந்தையில் முதலிடத்தை பிடித்தது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் முதலிடத்தை ஹோன்டா நிறுவனம் பிடித்தது.

    "ஒரே காலாண்டில் சுமார் 18 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதே காலாண்டில் ஆக்டிவா மட்டும் 40% வேகமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இது ஒட்டுமொத்த சந்தையை விட வேகமானது," என ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் வை.எஸ். குலேரியா தெரிவித்திருக்கிறார்.  #HondaActiva
    Next Story
    ×