என் மலர்

  செய்திகள்

  புதிய நிறங்களில் அசத்தும் டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V
  X

  புதிய நிறங்களில் அசத்தும் டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிள் இந்தியாவில் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
  புதுடெல்லி:

  டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V தற்சமயம் பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த ரேஸ் எடிஷன் மாடல் போன்றே புதிய நிறங்களில் அபாச்சி RTR 200 4V கிடைக்கிறது. புதிய நிறங்கள் அபாச்சி RTR 200 4V ரேஸ் எடிஷன் போன்றே காட்சியளிக்கிறது.

  டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V வைட்/ரெட், கிரே/எல்லோ, ரெட்/பிளாக் மற்றும் மேட் பிளாக்/ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளில் அதே RTR பிரான்டிங் கொண்டுள்ளது. முன்பக்க கௌல், டேன்க் ஷிரவுட்கள், பின்புற கௌல் ரென்டர்களில் புதுவித கிராஃபிக்ஸ் மோட்டார்சைக்கிளுக்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது.

  புதிய நிறம் தவிர மோட்டார்சைக்கிள் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மாடலில் கூர்மையான ஹெட்லைட் டிசைன், எல்இடி டிஆர்எல்கள், கவர்ச்சிகர டேன்க் ஷிரவுட்கள், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட ஸ்ப்லிட் சீட் செட்டப், கூர்மையான டெயில் பகுதி, எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.  மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V மாடலில் 198சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் கார்புரேட்டெட் மாடல் 20.2 பிஹெச்பி பவர், 18.1 என்எம் டார்கியூ செயல்திறன், ஃபியூயல் இன்ஜெக்டெட் மாடல் 20.7 பிஹெச்பி பவர், 18.1 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

  டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V மாடலின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 270 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சமாக விரும்புவோர் தேர்வு செய்ய டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் அம்சம் வழங்கப்படுகிறது.

  இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V கார்புரேட்டெட் மாடல் விலை ரூ.95,685 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஃபியூயல் இன்ஜெக்டெட் மாடல் ரூ.1.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  டிவிஎஸ் அபாச்சி RTR 200 4V ஏபிஎஸ் பிரேக் கொண்ட மாடலின் விலை ரூ.1.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×