என் மலர்

  செய்திகள்

  புதிய அப்டேட்: அசத்தும் 2018 டாமினர் 400
  X

  புதிய அப்டேட்: அசத்தும் 2018 டாமினர் 400

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 டாமினர் 400 புதிய நிறம் கொண்டிருக்கும் என சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் தெரியவந்துள்ளது.
  புதுடெல்லி:

  பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் டாமினர் 400 புதி்ய அப்டேட் பெற இருப்பது சமீபத்தில் புகைப்படம் மூலம் தெரியவந்தது. புதிய டாமினர் 400 வழக்கமான மேட் பிளாக் நிறம் கொண்டிருந்தாலும் இதன் அலாய் வீல்கள் தங்க நிறம் கொண்டிருக்கும் என திரஸ்ட்சோன் தெரிவித்துள்ளது.

  மேலும் இதே நிறம் கொண்ட மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. புதிய டாமினர் 400 முந்தைய மாடல்களை போன்றே கருப்பு நிறம் கொண்டிருக்கும் என்றாலும், வழக்கமான கருப்பு நிற அலாய் வீல்களுக்கு மாற்றாக புதிய மாடலின் அலாய் வீல்களில் தங்க நிறம் பூசப்பட்டுள்ளது.

  புதிய நிறம் வழங்கப்பட்டிருப்பதால் 2018 டாமினர் 400 புதிய தோற்றம் பெற்றிருக்கிறது. மேட் பிளாக் மற்றும் தங்க நிறம் ஒன்றிணைத்திருப்பது வித்தியாசமாக காட்சியளிக்கிறது. புதிய மேட் பிளாக் மற்றும் தங்க நிற அலாய் வீல் கொண்ட மாடல் சாதாரண மாடலை விட ரூ.500 முதல் ரூ.1000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இத்ததுடன் தற்போதைய டாமினர் 400 மாடலின் வெள்ளை நிற பதிப்பு நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் டாமினர் 400 மாடலின் சிவப்பு நிற பதிப்பு புகைப்படம் இணையத்தில் கசிந்திருந்தது. இதன் ஹேன்டிள்பேர், பெரிமீட்டர் ஃபிரேம், ஃபூட்பெக் அசெம்ப்ளி மற்றும் ஸ்ப்லிட் கிராப் ரெயில்களில் சில்வர் ஷேட் செய்யப்பட்டுள்ளது.

  புதிய சில்வர் அக்சென்ட் முந்தைய மோட்டார்சைக்கிளுடன் ஒப்பிடும் போது புதிய மோட்டார்சைக்கிளிற்கு புதிய தோற்றம் வழங்குகிறது. இதைதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய 2018 பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373 சிசி ஃபியூயல் இன்ஜெக்டெட், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34.5 பி.எச்.பி. பவர், 35 என்.எம். பீக் டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×