என் மலர்

  செய்திகள்

  காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்
  X

  காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா மேம்படுத்தப்பட்ட YZF-R3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  புதுடெல்லி:

  ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா மேம்படுத்தப்பட்ட YZF-R3 மாடலை காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது. 2018 ஃபுல்லி ஃபேர்டு மாடல் அமெரிக்காவில் பிப்ரவரி 2018-இல் விற்பனைக்கு வரயிருக்கிறது.

  புதிய மேம்படுத்தப்பட்ட 2018 யமஹா YZF-R3 மாடல் டீம் யமஹா புளூ, ரேவன் மற்றும் விவிட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய YZF-R3 மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  காஸ்மெடிக் மாற்றங்களை தவிர 2018 YZF-R3 மாடல் யூரோ -IV எமிஷன் கட்டுபாடுகளை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் BS-IV கட்டுபாடுகளுக்கு நிகரானதாகும். வடிவைப்புகளை பொருத்த வரை முந்தைய மாடல்களை போன்றே புதிய மாடலும் காட்சியளிக்கிறது.  2018 யமஹா YZF-R3 மாடலில் 321 சிசி பேரலெல் டுவின், ஃபியூயல் இன்ஜெக்டெட், லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 41.3bhp, 29.6Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

  அமெரிக்காவில் புதிய யமஹா YZF-R3 மாடல் ABS மற்றும் ABS இல்லாத மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவிலும் YZF-R3 ABS கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற உபகரணங்களை பொருத்த வரை தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே புதிய YZF-R3 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

  சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 41 மில்லிமீட்டர் கயாபா ஃபோர்க் மற்றும் பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன்களை கொண்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அம்சங்களை பொருத்த வரை எவ்வித மாற்றங்களும்
  மேற்கொள்ளப்படவில்லை.
  Next Story
  ×