search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மாருதி சுசுகி 2018 எர்டிகா ஆட்டோமேடிக் ஸ்பை விவரங்கள்

    மாருதி நிறுவனத்தின் 2018 எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் புதிய காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் தனது 2018 எர்டிகா மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. புத்தம் புதிய 2018 எர்டிகா ஏற்கனவே இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய சோதனைகளின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவில் 2018 எர்டிகா பெட்ரோல் வேரியன்ட்களில் 4-ஸ்பீடு டார்கியூ கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய வேரியன்ட்களில் 1.5 லிட்டர் K-சீரிஸ் மோட்டார் வழங்கப்படுகிறது.

    இதன் டீசல் மோட்டார் முற்றிலும் புதிய யூனிட் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 1.5 லிட்டர் யூனிட் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டீசல் மோட்டார் 1.3 லிட்டர் ஃபியாட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினை விட அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஃபியாட் 1.3 லிட்டர் இன்ஜின் 89 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.


    புகைப்படம் நன்றி: Kartik Jetly

    பெரிய டிஸ்ப்ளேஸ்மென்ட் மற்றும் கூடுதல் செயல்திறன் வழங்கும் என்பதால் எர்டிகா மாடலை தேர்வு செய்வோருக்கு கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும். இத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை 2018 எர்டிகா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய எர்டிகா மாடலை விட புதிய மாடல் சற்றே வித்தியாசப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2018 எர்டிகா மாடல் ஹார்டெக்ட் (HEARTECT) பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடலில் ஏபிஎஸ் சிஸ்டம், ட்வின் ஏர்பேக்ஸ் அனைத்து வேரியன்ட்களிலும் பொதுவான அம்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புறத்தில் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு பெறும் என கூறப்படுகிறது.

    இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் டாப்-என்ட் வேரின்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×