என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  மாருதி சுசுகி வேகன்ஆர் இந்திய வெளியீட்டு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் சோதனை செய்யப்படும் நிலையில் இதன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
  புதுடெல்லி:

  மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் ஆட்டோகார் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய மாருதி வேகன்ஆர் இந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் தீபாவளி சீசனில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இத்துடன் மாதம் 18,000 வேகன்ஆர் மாடல்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் மாதம் 14,000 வேகன்ஆர் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் வேகன்ஆர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. புதிய வேகன்ஆர் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மாடல் முன்னணி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வடிவமைப்பை பொருத்த வரை புதிய வேகன்ஆர் டால்-பாய் வடிவமைப்பு தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை மேம்படுத்தப்பட்ட சேசிஸ் வாகனத்தின் கவனிக்கத்தக்க மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


  புகைப்படம்: நன்றி SpeedHounds.Com

  புதிய வேகன்ஆர் கேபின் தற்போதைய மாடலை விட அதிக இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய வேகன்ஆர் டாப் என்ட் மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  புதிய மாருதி வேகன்ஆர் மாடலில் 1-லிட்டர், 3-சிலிண்டர், K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் AMT கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

  வழக்கமான வேரியன்ட் தவிர புதிய மாடலில் ஏழு பேர் அமரக்கூடிய ஹேட்ச்பேக் மாடலையும் மாருதி சுசுகி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஏழு பேர் அமரக்கூடிய வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×