search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018 ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்: புதிய தகவல்கள்
    X

    2018 ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்: புதிய தகவல்கள்

    ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு 2018-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் நிலையில், புதிய அமேஸ் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் டீசல் இன்னிங்ஸ் அமேஸ் மாடல் மூலம் துவங்கியது. ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மாடல் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    புதிய அமேஸ் ஹோன்டா-2UB என்ற குறியீட்டு பெயர் கொண்டுள்ளதோடு ACI மூலம் ரென்டர் செய்யப்பட்டுள்ளது. புதிய அமேஸ் மாடல் பார்க்க கூர்மையாகவும், முன்பக்கம் சிங்கிள் பீஸ் கிரிள் மற்றும் இதன் முகம் முந்தைய ஹோன்டா சிட்டியை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஹோன்டா சிட்டி போன்றே, புதிய அமேஸ் மாடலிலும் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டாப் எண்ட் மாடல்களை போன்றே புதிய மாடலிலும் எல்இடி DRL-களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் மெல்லியதாக காட்சியளிக்க இதன் பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் வீல் ஆர்ச் மேம்படுத்தப்பட்டு புதிய அலாய்களை பெறலாம் என கூறப்படுகிறது.



    ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய அமேஸ் இன்டீரியர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதில் முழுமையான புதிய டச் சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் ஏசி கண்ட்ரோல்களில் டச் சென்சிட்டிவ் பட்டன் மற்றும் கிளஸ்டர்களும் புளூ பேக்லிட் பெறும் என கூறப்படுகிறது.

    புதிய தலைமுறை ஹோன்டா அமேஸ் மாடலில் முந்தைய அமேஸ் மாடலில் வழங்கப்பட்ட இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டதை விட மென்மையான மற்றும் அமைதியாக இருக்கும் படி டீசல் இன்ஜின் ரீ-டியூன் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் வெளியீடு 2018-ம் ஆண்டு மத்தியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. புதிய அமேல் மாடல் இந்தியாவில் டிசையர், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் மற்றும் ஹூன்டாய் அக்சென்ட் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம்: AutoCarIndia

    Next Story
    ×