என் மலர்

  செய்திகள்

  டாடாக்கு டாட்டா சொன்ன நெக்சா
  X

  டாடாக்கு 'டாட்டா' சொன்ன நெக்சா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டு வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களை கடந்திருக்கிறது.
  புதுடெல்லி:

  இந்தியாவில் மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டு வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திராவை விட அதிகளவு விற்பனையாகி இருக்கிறது. 

  ஏப்ரல் 2017 முதல் ஜனவரி 2018 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் விற்பனையாகி இருக்கும் வாகனங்களின் எண்ணக்கையில் இந்த நிலவரம் வெளியாகி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2.70 லட்சம் யூனிட் நெக்சா பிராண்டு வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 

  இதே காலக்கட்டத்தில் மஹேந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் முறையே சுமார் 1 லட்சம் மற்றும் 1.67 லட்சம் யூனிட் வாகனங்களை விற்பனை செய்திருக்கின்றன. அந்த வகையில் நெக்சா பிராண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றன.   இந்த பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனம் 10.88 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து முதலிடம் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹூன்டாய் இந்தியா 4.43 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2015 மே மாத வாக்கில் நெக்சா பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

  இந்தியாவில் தற்சமயம் வரை 200க்கும் அதிகமான நெக்சா டச் பாயிண்ட்கள் - விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. நெக்சா பிராண்டின் கீழ் பலேனோ, இக்னிஸ், சியாஸ் செடான் மற்றும்  எஸ்-கிராஸ் கிராஸ்ஓவர் என நான்கு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
  Next Story
  ×