search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகேந்திரன்
    X
    மகேந்திரன்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் தங்கிய விடுதியில் வருமான வரித்துறை சோதனை

    தேன்கனிக்கோட்டையில் பிரசாரத்தை முடித்து விட்டு லாட்ஜூல் தங்கிய மகேந்திரன் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையொட்டி அவர், தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    இந்த நிலையில் பிரசாரத்தை முடித்து கொண்டு இரவில் மகேந்திரன் லாட்ஜூல் தங்கியிருந்தார்.

    அப்போது திடீரென லாட்ஜிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்கள் 2 பேருடன் வந்தனர். பின்னர் மகேந்திரனிடம், அறையை சோதனையிட உள்ளதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து படுக்கை அறை, குளியல் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை முடிவில் மகேந்திரன், தனது செலவுக்காக வைத்திருந்த ரூ.350 மட்டுமே சிக்கியது. மேற்கொண்டு வேறு பணமோ, பொருட்களோ எதுவும் சிக்கவில்லை.

    இதனால் பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

    Next Story
    ×