என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன்
    X
    பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன்

    பாஜக வேட்பாளர் பட்டியல்... காலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு சீட்

    தமிழக சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். 

    கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுகவில் வாய்ப்பு வழங்காததால் இன்று காலையில் பாஜகவில் சேர்ந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வேட்பாளர்கள் விவரம்:

    தாராபுரம் (தனி)- எல் முருகன் 
    அரவக்குறிச்சி - அண்ணாமலை 
    காரைக்குடி- எச். ராஜா 
    கோவை தெற்கு - வானதி சீனிவாசன் 
    ஆயிரம் விளக்கு- குஷ்பு
    நாகர்கோவில்- காந்தி
    திருநெல்வேலி -நயினார் நாகேந்திரன்
    மதுரை வடக்கு - டாக்டர் சரவணன்
    துறைமுகம் -வினோஜ்  பி.செல்வம்
    திருக்கோவிலூர் - கலிவரதன்

    மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி
    திட்டக்குடி- பெரியசாமி
    திருவையாறு -பூண்டி வெங்கடேசன்
    விருதுநகர் -பாண்டுரங்கன்
    ராமநாதபுரம் - குப்புராமு
    குளச்சல் - பி.ரமேஷ்
    திருவண்ணாமலை- தணிகைவேல்.
    Next Story
    ×