search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனை மரங்கள்
    X
    பனை மரங்கள்

    வேளாண் பட்ஜெட் - பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம்

    பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் பனைத்தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

    * 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

    * பனை வெல்லத்தை பனை வாரியம் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

    * பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

    * பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும்

    * பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும்
    Next Story
    ×