search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு -நிதியமைச்சர் அறிவிப்பு

    பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

    ஏழை, எளிய உழைக்கும் வர்க்க மக்கள் பெட்ரோல் விலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். 

    பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து வரி குறைப்பு செய்யப்படுகிறது. பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

    போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி, மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும். சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×