search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    பாராளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை அ.தி.மு.க. தொடங்கிவிட்டதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ParliamentElections #EdappadiPalaniswamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்காவில் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்கள் நடப்பட்டு வருகிறது. மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. புலிகளை கண்டு ரசிக்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    குடிமராத்து திட்டம் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ஏரி குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒத்துழைப்போடு 1511 ஏரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உயர் கல்விக்கு ஆணையம் அமைப்பது மாநில அரசை பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்புவார்கள்.

    நமக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம்.

    காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடிதான் நாம் செயல்படுவோம். ஏனென்றால் 2 மாதத்துக்கு முன்பு கடுமையான குடிநீர் பிரச்சனை ஏற்பட்டபோது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.

    அப்போது குடிநீருக்காக 3 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க தயாராகி விட்டதா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. அடுத்த வருடம் மே மாதம்தான் வர உள்ளது. எங்களது பணியை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்.

    மதுரையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுடன் பேரணி நடத்தினோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 2 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயிரம் பேர் சைக்கிளில் சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகின்றனர்.

    எனவே எங்களை பொறுத்தவரை மதுரையில் அன்றைய தினமே பிரசாரம் துவக்கப்பட்டு விட்டது.

    பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக மற்ற மாநில முதல்- அமைச்சர்கள் எடுத்து கூறும் கருத்து நமது மாநிலத்துக்கு பொருந்தாது. ஏனென்றால் நமது மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். நாம் யாருடனும் கூட்டு கிடையாது. நாம் யாருக்கும் எதிரியும் கிடையாது.

    எனவே நம்முடைய மாநில மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது நமது மாநில பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளனர்.

    அதன் அடிப்படையில் நாம் இன்றைய தினம் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.


    காவிரி பிரச்சனை வந்தபோது நம்முடைய தமிழக எம்.பி.க்கள்தான் 22 நாட்கள் பாராளுமன்றமே செயல்பட முடியாத அளவுக்கு நாம் அழுத்தம் கொடுத்தோம். அப்போது எந்த மாநில முதல்-அமைச்சராவது நமக்கு ஆதரவு கொடுத்தார்களா? தேர்தலை பொறுத்தவரை கூட்டணி பற்றி அந்த சந்தர்ப்பத்தில் தான் முடிவு செய்வோம்.

    தேர்தல் கூட்டணிக்கு இன்னும் ஆயுத்தபணியை எந்த கட்சியும் எடுக்கவில்லை. எனவே கூட்டணி பற்றி தேர்தல் காலத்தில்தான் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElections #ADMK #EdappadiPalaniswamy
    Next Story
    ×