search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரும் வருமான வரித்துறை சோதனைகள் - ஆளுநரை சந்தித்து மனு அளித்தார் மு.க.ஸ்டாலின்
    X

    தொடரும் வருமான வரித்துறை சோதனைகள் - ஆளுநரை சந்தித்து மனு அளித்தார் மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். #MKStalin #Governor #ITRaid
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். அவருடன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை குறித்து, நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் குறித்து விசாரிக்க வேண்டும்; சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.



    நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்தார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Governor #ITRaid

    Next Story
    ×