என் மலர்

  செய்திகள்

  ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்: சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
  X

  ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்: சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #TTVDhinakaran #RKNagar
  சென்னை:

  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். அவர் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்து 3-வது இடத்தை பிடித்தார்.

  வெற்றி பெற்ற தினகரன் நேற்று பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார்.

  இந்த நிலையில் தினகரன் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். இதற்கான நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலக அறையில் நடந்தது. டிடிவி தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  தமிழக சட்டசபை வருகிற 8-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் சுயேட்சை உறுப்பினராக தினகரன் கலந்துகொள்கிறார். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை அவர் எதிர் எதிரே சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #TTVDhinakaran  #RKNagar
  Next Story
  ×