என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை: ஜி.கே.வாசன்
    X

    ஆர்.கே.நகர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை: ஜி.கே.வாசன்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் ஆதம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில் மூத்த தலைவர் ஞானதேசிகன், இளைஞரணி பொதுச் செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-



    ஆர்.கே.நகரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியின் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுத்த வேண்டும்.

    மோடி ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கன்னியாகுமரிக்கு வந்து இருக்கலாம். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை துரிதமாக முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×