என் மலர்

    செய்திகள்

    தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் 1-ந்தேதி வேட்புமனு தாக்கல்
    X

    தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் 1-ந்தேதி வேட்புமனு தாக்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வருகிற 1-ந்தேதி பகல் 12 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்றை தினமே வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் நாளில் 4 சுயேட்சை வேட்பாளர்களும், 2-வது நாளான நேற்று சலூன் கடைக்காரர் நடராஜன் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வருகிற 1-ந்தேதி பகல் 12 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருடன் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், பி.கே. சேகர்பாபு மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் செல்ல உள்ளனர்.


    வேட்பாளர் மருதுகணேஷ் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளார். அதனை தொடர்ந்து திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும், மருதுகணேசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யும் மருதுகணேஷ் அன்றை தினமே வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயணம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 10-ந்தேதிக்கு மேல் மருது கணேசை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆர்.கே.நகர் தொகுதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×