என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் மனநிலை என்ன?
By
மாலை மலர்25 Nov 2017 2:58 AM GMT (Updated: 25 Nov 2017 2:58 AM GMT)

7 மாத இடைவெளியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுவது குறித்து ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது.
துணை ராணுவ படைவீரர்கள், பறக்கும் படை, மத்திய அரசின் பார்வையாளர்கள், சிறப்பு அதிகாரிகள் என தேர்தல் பணிகள் நடந்தும், தேர்தல் ரத்து ஆனதால் ஆர்.கே.நகர் தொகுதியை நாடே திரும்பி பார்த்தது.
இதையடுத்து ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கிணங்க, தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக (2015- இடைத்தேர்தல், 2016- பொதுத்தேர்தல், 2017 ஏப்ரல் இடைத்தேர்தல் ரத்து) தேர்தலை சந்திக்க உள்ளனர்.
பணப்பட்டுவாடா புகாரால் கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டு 7 மாத இடைவெளியில் மீண்டும் தேர்தல் நடைபெறுவது குறித்து தொகுதி மக்கள் சிலரின் மனநிலை வருமாறு:-
சென்னை ரவி(வயது 56), சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி:-
நான் வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவில் வசித்து வருகிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறேன். என்னுடைய வாழ்வாதாரமும், தொகுதியின் நிலைமையும் அப்படியே தான் இருக்கிறது.
தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அவர்களிடம்(அரசியல்வாதிகள்) இருக்கிறது கொடுக்கிறார்கள். எங்களிடம் இல்லை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம். வீட்டுக்கு வர லட்சுமியை (பணம்) வேண்டாம் என்று சொல்ல முடியாது.

புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி சாந்தி(70):-
எம்.ஜி.ஆர்., காமராஜர் போன்ற தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மக்களை கட்டி அரவணைத்து பாசமழையை பொழிந்து வாக்கு கேட்டார்கள். ஆனால் இப்போது உள்ள சில தலைவர்கள் பணமழையை பொழிந்து மக்களிடம் வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள்.
தேர்தலின் போது கொடுக்கும் பணத்தை தேர்தல் முடிந்த பிறகு விலைவாசியை உயர்த்தி வட்டியுடன் திரும்ப பெற்றுக்கொள்கிறார்கள்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ்(32):-
ஆர்.கே.நகர் தொகுதியில் கோவில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடைபெறும். அதேபோன்று தேர்தல் வந்தால் நாங்கள் திருவிழாவாக தான் பார்க்கிறோம். அரசியல் கட்சியினர் ஆடல், பாடல், கச்சேரியுடன் ஓட்டு சேகரிப்பது. வெளிமாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிவது என ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் களைகட்ட போகிறது. எனது ஆட்டோவில் கூடுதல் சவாரி கிடைக்கும். இதனால் தேர்தல் முடியும் வரையில் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
தண்டையார்ப்பேட்டை நெடுஞ்சாலையில் உணவு கடை நடத்தி வரும் லட்சுமி(50):-
ஆர்.கே.நகர் தொகுதியில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புண்ணியத்தால் மெட்ரோ ரெயில் திட்டம் கிடைத்துள்ளது. மற்றபடி தொகுதி அப்படியே தான் இருக்கிறது. அவர்(ஜெயலலிதா) இருந்திருந்தால் தொகுதி மேம்பாடு அடைந்து இருக்கும்.
ஓட்டுக்கு யார் பணத்தை வாரி இரைத்தாலும், நாங்கள் கொள்கையின்படி தான் வாக்களிப்போம். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள்.
புது வண்ணாரப்பேட்டையில் சாலையோரம் காய்கறிகள் விற்பனை செய்யும் காமாட்சி(60):-
கடந்த 2016-ம் ஆண்டில் தேர்தல் நடந்தபோது, ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாக சொன்னார்கள். எனக்கு கிடைக்கவில்லை. கடந்த முறை ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுத்ததாக சொன்னார்கள். அதுவும் எனக்கு கிடைக்கவில்லை.
ஓட்டுக்கு மொத்தமாக கொடுக்கும் பணத்தை அரசியல்வாதிகள் சிலர் அமுக்கி விடுகிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு தான் என்றாலும் மக்கள் பணத்தை தான் மக்களிடம் தருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த முறை ஏப்ரல் மாதம் கோடை காலத்தில் பணமழை பெய்தது போன்று பருவமழை காலத்தில் பணமழை பொழியுமா? என்றே எதிர்பார்ப்பே தொகுதியில் பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது.
பெயர், விவரம் தெரிவிக்க விரும்பாதவர்கள், ‘ஓட்டுக்கு பணம் கிடைத்தால் பண்டிகை(கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்) காலத்தை உற்சாகமாக கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டனர்.

Next Story
×